×

திருப்பூரில் குடிநீர் குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டர் வீணாவதை கண்டித்து சமூக ஆர்வலர் நூதன போராட்டம்

திருப்பூர்:  திருப்பூரில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாவதை கண்டிக்கும் விதமாக சமூக ஆர்வலர் ஒருவர் வீணாகும் நீரில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போதைய சூழலில், நாட்டில் தண்ணீர் பிரச்னை அதிகரித்து கொண்டே வரும் நிலையில், மக்களாகிய நாம், இருக்கும் தண்ணீரை சரியாக பராமரிக்காமல் சற்று அலட்சியமாக இருந்து வருகின்றோம். அதாவது, பல கிராமங்களில் சாலைகளிலோ, தெருக்களிலோ குடிநீர் குழாய்களில் தண்ணீர் பிடித்துவிட்டு அதை அடைக்காமல் செல்வது மற்றும் நிலத்தடியில் வரும் தண்ணீர் பைப்புகள் மற்றும் குடிநீர் குழாய்கள் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் தேங்கி நிற்பது, அதை சரி செய்ய பஞ்சாயத்து உறுப்பினர்கள்,  நகராட்சி மற்றும் மாநகராட்சி தாமதப்படுத்துவதால் தண்ணீர் பெரிதளவு வீணாகிறது. மேலும் இதனால் பல விதமான நோய்கள் மக்களிடம் பரவுகிறது.  இதுகுறித்து மக்கள் மற்றும் சமூக அக்கறை கொண்டவர்கள் தண்ணீர் வீணாவதை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில்,  திருப்பூர்  அவிநாசி சாலையில் உள்ள பங்களா ஸ்டாப் பேருந்து நிறுத்த பகுதியில், குடிநீர் குழாய் உடைந்து அதிலிருந்து லட்சணக்கணக்கான லிட்டர் நீர் தொடர்ந்து வீணாகி வருகிறது. இதுகுறித்து, பொது மக்கள் பல முறை புகார் அளித்தும், மாநகராட்சி நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும்  எடுக்கவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில், அப்பகுதியில் வசித்து வரும் சந்திரசேகர் என்ற சமூக ஆர்வலர் குழாய் உடைப்பு ஏற்பட்ட பகுதியில், தேங்கி நின்ற நீரில் இறங்கி அங்கேயே, சோப்பு போட்டு குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். தினந்தோறும் பல லட்சம் லிட்டர் குடிநீர் வீணாகி வரும் நிலையில், தனது போராட்டத்திற்கு பின்பாவது மாநகராட்சி அதனை சரிசெய்ய வேண்டும் என சமூக ஆர்வலர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : collapse ,millions ,Tirupur ,protests , Tirupur, Drinking Water Pipe, Social Activist, Modernist Struggle
× RELATED 10 நிமிடங்கள் கட் ஆன திருப்பூர் ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி காட்சி